Search This Blog

25 November 2013

கோழிக்கிறுக்கல்

"தம்பி.. இங்கே வாயேன்"
விடியற்காலையில் எழுந்தபோதே அம்மாவின் அழைப்பு.

சென்றுபார்த்தபோது எனக்கும் மகிழ்ச்சிதான்.

அடைவைக்கப்பட்ட பதினைந்துமுட்டைகளுமே பொரிந்து
கூடைக்குள் உமிபுடைசூழ கோழிக்குஞ்சுகளாய் மாறிப்போயிருந்தன.


ஒன்னு.. ரெண்டு.. மூனு..

ஏழு கருப்பு. எட்டு வெள்ளை.

18 November 2013

சண்டை

எனக்கு மீன் பிடிக்காது, அவருக்குப் பிடிக்கும். 

அவர் ரசனை எனக்குப் பிடிக்காது, என் ரசனை அவருக்குப் பிடிக்காது. 

இப்பிடி நிறைய விஷயங்கள்ல வேறுபாடு இருந்தாலும், 'தினம் ஒரு சண்டை' என்பதில் இருவருக்கும் மாற்றுக்கருத்தே கிடையாது.

22 - 26 வயது..., ஆண்களுக்கு மிகவும் கடினமான வயது...

1) உங்கள் காதலிக்கு திருமணம் ஆகி இருக்கும். 

2) அப்போது தான் வேலை தேட ஆரம்பித்திருப்பீர்கள். அதற்குள்,பெரியவர்களின் பார்வையெல்லாம் " இதெல்லாம் எங்க உறுப்படப்போது?" என்பது போன்றே இருக்கும். 

3) டீன் ஏஜ் பசங்கலெல்லாம், அவர்கள் கூட்டத்தில் சேர்த்துக் கொள்ளத் தயங்குவார்கள்.உ ங்களுக்கு வயதாகி விட்டது போல் எண்ணுவார்கள். 

4) கார்ட்டூனை ரசிப்பது போல் செய்திகளையும் ரசிப்பீர்கள்.

5) உடல் பருமன் ஏறாம , நீங்கள் விரும்பிய அனைத்தையும் உங்களால் சாப்பிட முடியாது. 

12 November 2013

மனைவி அமைவதெல்லாம்...!

திருமணம் நிச்சயம் ஆனதிலிருந்தே எல்லா ஆண்களையும் போல நானும் ஒரு வித உற்சாகத்துடனும்,பரவசத்துடனும் நாட்களை கடத்தினேன். கனவுகள் வராத நாள் கிடையாது. வரும் பெண்ணை பற்றிய எதிர்பார்ப்புகளும்,கற்பனைகளும் சுவாரஸ்யத்தை கூட்டியது. நெறைய பாலகுமாரன் புத்தகங்களை சேமித்து வைத்து இருந்தேன் வருகிறவளுக்கு படிக்க கொடுக்க வேண்டும் ஒருவேளை அவளும் பாலகுமாரன் ரசிகையாக இருந்தால் ..? நினைக்கவே சிலிர்ப்பாய் இருந்தது.

கிரிக்கெட்டில் நான் வாங்கிய பரிசுகளை எல்லாம் தூசு தட்டி எடுத்து பார்வையில் படும்படி வைத்தேன் . இளையராஜா பாடல்கள் தொகுப்புகளை வாங்கி வைத்தேன்.எஸ் .ஜானகி பாடல்களை தனியே பதிவு செய்து வைத்தேன்.கேரம் ,செஸ் போர்டு எல்லாம். இன்னும் பல விஷயங்கள் . ஒரு பெரிய கற்பனை கோட்டையில் வாழ துவங்கி இருந்தேன் .

31 May 2013

மனைவி எப்படி இருக்க வேண்டும் ...?

கணவனது சினத்தை தணிக்கும் கருவியாக அவள் இருக்க வேண்டும். மாறாக, அவனது கோபத்தில் எண்ணெய் ஊற்றி குடும்பத்தை இரண்டாக்கி விடக்கூடாது.

அறுசுவை உணவை அன்போடு ஊட்டுவதில் அவள் தாய் போல் இருக்க வேண்டும்.

22 May 2013

காதலிக்கு ஒரு கடிதம்

அன்பே!

நீ சொன்னாய் என்பதற்காகத்தான் உனது அப்பாவிடம் பேசிப் பார்க்கலாம் என்ற
முடிவுக்கு வந்தேன். ‘அலுவலகத்தில் இருக்கிறேன் , நீல்கிரிஸில் சாயங் காலம் சந்திக்கலாம்’ என உன் தகப்பன் தொலைபேசியில் சொன்னபோது கடமை தவறாதவனின் மகளைத்தான் காதலித்திருக்கிறோம் என இறுமாந்திருந்தேன். சொன்னபடி ஐந்து மணிக்கெல்லாம் வந்தமர்ந்த உனது அப்பனைப் பார்த்த போது ‘எருமை மாட்டிற்கு மான் குட்டி எப்படி பிறந்தது?!’ என்ற பழைய கவிதைதான் நினைவிற்கு வந்தது.

என் காதல்

காதலி வேண்டும் என்றால்
இன்னொரு பெண்ணை நாடி இருப்பேன்
என்றும் அழியாத காதல் வேண்டும் ..

உன்னைப்போல் நேசிக்கும் ஆன்மா
வேண்டும் என்பதால்
உனக்காகவே காத்திருக்கிறேன்...!

21 May 2013

நித்திரையில்

முத்தங்களை
அள்ளித் தெளித்துவிட்ட
நிம்மதியில்
நீ....
நித்திரையில்
எடுத்தும்
கோர்த்தும்
கலைத்துமாய்
நான் ♥...!

16 May 2013

மங்குனி அமைச்சர்

KPN ல எனக்கு பக்கத்துல இருந்த ஒரு பொண்ணு போன்ல யாருகிட்டையோ fb பத்தி பேசிக்கிட்டு வந்திச்சு....... எனக்கு துரு துருன்னு ஆகிபோச்சு, நைசா பேச்சு குடுத்தேன்....

" மேம் நீங்க fb அக்கவுண்ட் வச்சிருக்கிங்களா ?"

"எஸ் அப்கோர்ஸ் , ஏன் கேக்குறிங்க ?"

" நானும் வச்சிருக்கேன் அதான் கேட்டேன் "

அவளிடம் இருந்து கற்றுக்கொண்டேன்

அவளிடம் இருந்து கற்றுக்கொண்டேன்...

பாசம் காட்ட,
மற்றவர்களை அனுசரித்து போக,
கோவத்தை அடக்க,
எந்த சூழ்நிலையிலும் புன்னகைக்க, 
சிந்திக்க,
ஒற்றுமையாய் இருக்க,
விட்டுக்கொடுத்து போக,
அனைவரின் ஆசையையும் பூர்த்தி செய்து வைக்க,
ஆசைகளை மறைக்கவும் 
அவளிடம் இருந்து தான் கற்றுக்கொண்டேன் 

அவள் தான் என் தாய்...!

09 May 2013

காதல்


கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால்
மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஓர் கடுகாம் 

--- பாரதிதாசன் 

நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு


 இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன.  அவற்றில் செல்போன் பயன்பாடு, ராணுவ பயன்பாடு,
உளவு என பல்வேறு காரங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது.  சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்க செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதியை கடக்கும் பொது மட்டும் 3 வினாடிகள் ஸ்தம்பித்துவிடுகிறது.  3 வினாடிகளுக்கு பிறகு  வழக்கம்போல் வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. எந்தவித  பழுதும் அதன் செயற்கைகோளில், அதன் கருவிகளில்ஏற்படுவதில்லை.
இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியதயை அளித்தது.


இது எப்படி சாத்தியம்??? - என்பதை ஆராய்ந்து, கிடைத்த முடிவு நாசாவை மட்டுமல்ல, உலகையே மிரள வைத்தது.

வாழ்க்கை

எழுதப்படாத பக்கங்களில், வரையப்படாத ஓவியங்களில்,
பாடப்படாத பாடல்களில், செதுக்கப்படாத வெட்டுகளில்,
இன்னமும் காத்திருக்கிறது ஒரு வரலாறு,
எனக்காக...!
உனக்காக...!
நமக்காக...! 

காணமல் போன சொற்கள் ...!

நம் உரையாடல்கள் அனைத்தையும்
அலைபேசிகள் தின்று தீர்ந்துப் போனபின்
நம் திருமணம் நடந்ததா ?

இன்றும் தான் பேசுகிறோம்
'சரி' என்ற ஒற்றைச் சொற்களால்
முடிந்துவிடுகிறதே நம் உரையாடல்கள் ...!

07 May 2013

முத்தம்

முத்தமென்பது
தற்காலிகமாக
என்னுயிரை
உன்னிடத்தில்
மாற்றும் முயற்சியின்
வெற்றி...!


02 May 2013

எங்கோ படித்தது

வரங்களே
சாபங்களானால்
இங்கே
தவங்கள்
எதற்காக?

கருணை

கூரை மேல் குடும்பம்
தெப்பமாய் குடிசை
வெள்ளத்தில் நாய்
துயரத்தில் சிறுவன்
...
...
தவிப்பில் க‌ண்ணீர்... !

30 April 2013

சாளரம்

மழை நீரில் விளையாட
சிறு பிள்ளையா நீ ... ?
என்று ஏளனம் செய்த
நண்பர்களுக்கு ஒரு
சிறு புன்னகையை பதிலாக்கி
மீண்டும் தொடருகிறேன் ....
மழை துளியில்
உன் முகம் தேடுவதை ... !

மழை


ன்னல் வழியாய் 
மெதுவாய் நுழைந்து 
வெட்க்கத்துடன் உள்ளே வருகின்றன 
மழைத் துளிகள் சில 

முன்பொரு மழைநாளில் 
என்னறை ஜன்னலில் அவள் நின்று 
மழை ரசித்த 
ஞாபகத்தில் வந்திருக்கலாம் 

அடுத்த மழைக்கும் 
வரக்கூடும் துளிகள் சில 
அவளைத் தேடி...!

29 April 2013

கடமை


பிள்ளைகளைப் பெற்று, வளர்த்து, நன்றாகப்படிக்கவைத்து, மகனுக்கு நல்ல வேலைதேடி தந்ததும், பெண்ணுக்கு நகைகள் சேமித்து, நல்ல இடத்தில் திருமணம் முடித்து வைத்ததும் நம் கடமை முடிந்து விடுகிறது என்று எண்ணி, காலம் காலமாக இதையே கடமையாகச்செய்து வருகிறோம்.

நாம் இப்படி கடமைக்காக நம் கடமையை செய்வதால் ,பிள்ளைகளும் தன் கடமைக்காக பெற்றோர்களுக்கு கடமையை செய்கிறார்கள். தாய் தந்தையை பணம் செலுத்தி முதியோர் இல்லங்களில் விடுகிறார்கள் , பெற்றோர் இறந்த செய்தி வந்தாலும் கூட, அதிகம் 10,000 அனுப்புகிறேன் இறுதி சடங்கும் நீங்களே செய்துவிடுங்கள் என்று முதியோர் இல்லத்திற்கு சேதி அனுப்பும் கொடூர மனம் கொண்டவராய் மாறிவிடுகிறார்கள்.

26 April 2013

ஒரு சில நிமிடங்களில் குழந்தை தாயாகி.. தாய் குழந்தையாகி...

எல்லா குழந்தைகளின் ஒரே வேண்டுதல் அம்மா எப்போதும் என்னுடன் இருக்கவேண்டும் என்பதே.... இந்த காலக்கட்டத்தில் அம்மா அப்பா இருவருமே வேலைக்கு சென்றால் குழந்தைகளுக்கு தேவையான வசதிகளை கல்வியை தரமுடியும் என்ற நம்பிக்கையினால் உழைப்பு இருவரின் பங்காகிறது....

ஆனா யாருக்காக உழைக்கிறோமோ அந்த குழந்தைக்கு தேவையான பாசத்தையும் அன்பையும் அரவணைப்பையும் நம்மால் கொடுக்கமுடிகிறதா என்றால் இல்லை என்றுத்தான் சொல்ல இயலும்…

நிலா காட்டி சோறு ஊட்டிய அம்மாக்கள் அந்தக்காலம் குழந்தைகளுக்கு நல்ல கதைச்சொல்லிகளாக இருந்து கற்பனையில் நம்மை வேறு உலகத்துக்கு கூட்டிச்செல்வார்கள்… நம்முடனே இருப்பார்கள்…

காதல் அழிவதில்லை...

வயதான பெரியவர் ஒருவர் காலை 8.30 மணிக்கு என் மருத்துவமனைக்கு வந்திருந்தார். அவர் மணி பார்ப்பதும் பிறகு அவர் கையில் இருக்கும் டோக்கனையும் அடிக்கடி பார்த்து கொண்டே இருந்தார்.

நோயாளிகள் ஒவ்வொருவராக பார்த்தபின் அவர் டோக்கன் எடுத்து கொண்டு உள்ளே வந்தார்.என்ன பெரியவரே ஏதாவது அவசர வேலை இருக்கா அடிக்கடி மணி பார்த்துகிட்டே இருக்கீங்க என்றேன்.ஆமாம் டாக்டர் என் மனைவிக்கு நான் போய் தான் சாப்பாடு குடுக்கனும் என்றார்.

ஏன் அவங்களுக்கு உடம்பு சுகம் இல்லையா என்று கேட்டேன்.ஆமாம் டாக்டர் கடந்த மூன்று வருடமா அவளுக்கு நியாபக மறதி வந்து விட்டது.என்னையே கடந்த மூன்று வருடமா அவளுக்கு யார் என்று தெரிவதில்லை என்றார்.


அம்மா

     உறக்கம் இல்லாமல் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தேன். ஜன்னல் வழியே வெளியே பார்த்தேன். இன்னமும் விடியவில்லை.நேரம் என்ன இருக்கும்?

காகம் ஓன்று ஜன்னலில் உட்கார்ந்து கரைய ஆரம்பித்தது. விடியும் முன் காகம் கரைவது வித்தியாசமாய் இருந்தது.இது அதிகம் பசி பிடித்த காகம். கண்ட கண்ட வேளைகளில் கரையும்.

சூ ' என்று விரட்டினேன். அது சட்டை செய்யாமல் மீண்டும் 'கா கா 'வென்று இன்னமும் உச்ச ஸ்தாயியில் கரைய ஆரம்பித்தது. எரிச்சல் மிக எழுந்தேன். அது கொஞ்சம் கூட அசராமல் அங்கேயே உட்கார்ந்து கொண்டிருந்தது. விளக்கைப் போட்டு கடிகாரம் பார்த்தேன். மணி மூன்று நாற்பது.இந்த நேரத்தில் இது என் இப்படி கரைத்து எரிச்சலை உண்டு பண்ணுகிறது. மீண்டும் கையை தூக்கி விரட்டினேன். அது இன்னமும் வேகமாக கரைய ஆரம்பித்தது.

கதவு தட்டப்படும் ஓசை. இந்த நேரத்தில் யார்.?

"யாரு?" என்றேன்.

" நான் வாசு ?"

" வாசுன்னா " என்று கேட்டபடியே கதவை திறந்தேன்.

அந்த பையன் அங்கு நின்றிருந்தான்.

அரை இருட்டில் அவன் முகத்தை என் நினைவறைகளில் தேடினேன்.ம்ஹும் .யார் என்று தெரியவில்லை.

" யாருப்பா நீ ?" 

" சார் என்னை அடையாளம் தெரியலையா.. நான்தான் வாசு, உங்க பெரிய அண்ணன் முரளி வீட்டு சொந்தக்காரர் பையன்..உங்கம்மா இறந்துட்டாங்க உடனே உங்களை கூட்டு வரச் சொன்னாரு.."

"நீ எதுலப்பா வந்தே ?"
" சைக்கிள சார்,வாங்க ,நான் டபுள்ஸ் அடிப்பேன்.."

சைக்கிளில் அவன் பின்னால் உட்கார்ந்து போனேன்.அவன் மேல் இருந்து வியர்வை ஸ்மெல் அடித்துக் கொண்டிருந்தது. வேகமாக மிதித்து போனான்.

அம்மாவை ஹாலில் கிடத்தியிருந்தார்கள். எந்த சலனமும் முகத்தில் இல்லை. வயதின் முதுமை ரேகைகள் மட்டுமே.

" எப்படி ?" அண்ணன் பக்கம் திரும்பி கேட்டேன்.

மன்னி பதில் சொன்னாள். " சீக்கிரமே எழுதுட்டாங்க. .. காபி கேட்டாங்க .. பால் இன்னும் வரலைன்னு சொன்னேன்.. ஒரு டம்பளர் சுடு தண்ணியாவது கொடுன்னாங்க.. போட்டு கொண்டு வரதுக்குள்ள ... கூப்பிட்டுப் பார்த்தேன் பதில் இல்ல.. தொட்டு எழுப்பலாம்ன்னு தொட்டேன்.. சில்லிப்பாய் இருந்தது.. எதிர்த்தால இருக்கிற டாக்டரை எழுப்பி இவர் கூட்டிண்டு வந்தார்.. பார்த்ததும் சொல்லிட்டார் ."

' சம்பத்துக்கும் ,சாரிக்குக் சொல்லிட்டேன்.. அவங்க மதுரையில் இருந்து கிளம்பியாச்சு.. சந்தானத்தை தான் எப்படி காண்டக்ட் பண்றதுன்னு தெரியலை"

"நான் பார்த்துக்கறேன்.." என்றேன்.

" எப்படி ,சொல்லாம விட்டுடோம்ன்னு குதிப்பான்.. ரொம்ப தூரத்தில இருக்கான்.. சொல்ல வேண்டியது நம்ம கடமை..வரானோ இல்லையோ ?" என்று அண்ணன் இழுத்தான்.

சந்தானம் வேலை செய்வது சிப்சாகர் ,அஸ்ஸாம் கேந்திர வித்யாலயாவில்.. ஆறு வருடம் முன்னால் அங்கே வேலைக்குப் போனவன் அங்கேயே ஒரு அஸ்ஸாமியப் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டான்.. அதற்கு பின் வரவேயில்லை.. அம்மாவுக்கு அவனை ரொம்ப பிடிக்கும்.. அவனுக்கு பிடிச்சிருக்கும் பண்ணிண்டிருப்பான்... அவன் ஒருத்தன் தான் டான்னு ஒண்ணாம் தேதி யான்ன ஆயிரம் ரூபாய் சொளையா அனுப்பறான்.. வேற யார் எனக்கு சேசரா?" என்பாள்.

யாருக்கு தெரியும் அவன் மனதில் என்ன ஓடுகிறது என்று.

கேந்திரிய வித்யாலா விற்கு செய்தி அனுப்ப ஒ.என்.ஜி.சி.யை தான் நாட வேண்டும்.அவர்களிடம் நிச்சயம் ஹாட் லைன் இருக்கும்.சாவு வேறு கோரிக்கை வைத்தால் செய்வார்கள்.கதீட்ரல் சர்ச் அருகே அவர்களின் அலுவுலகத்தைப் பார்த்த நினைவு.

வாசுவின் சைக்கிளை வாங்கி கொண்டு வேகமாய் மிதித்துப் போனேன்.

டுட்டியில் இருந்த வாலிபர் செண்டிமெண்டலானவராய் இருப்பார் போல் இருக்கிறது.

விஷயம் சொன்னதும்"வயசு என்ன ?"என்று கேட்டார்.

சொன்னேன்,

" ஒ ..எழுபதா..நடமாடிட்டு இருந்தாங்களா..?"

"ம்?"

"அட்டாக்கா?"

"ஆமாம்"

"அஸ்ஸாமுக்கு தான் சொல்ல முடியும் ..சொல்லிடறேன்..அவங்க சிப்சாகர் பாஸ் பண்ணிடுவாங்க.. எப்படியும் அவர் அஸ்ஸாம் வரைக்கு ரயில்தான் வரணும்..அங்க வந்து பிளைட் பிடிக்கலாம்.."

விவரங்களை எழுதி தர சொன்னார்.

எழுதி கொடுத்தேன்.

"நான் சொல்லிடறேன்..நீங்க போய் உங்க வேலைகளை பாருங்க..?"

"நன்றி சார்..?"

"இதுக்கு ஏன் நன்றி.. கிளம்புங்கள்.. எங்கம்மாவுக்கு வயசு அறுபத்து ஆறு "என்றார்.

வீட்டிற்க்கு திரும்பிய போது சில சொந்தகார்கள் , உள்ளூர் காரர்கள் வந்திருந்தார்கள். காசி பாட்டி நாற்காலியில் உட்கார்ந்திருந்தாள். காசி பாட்டிக்கு வயது தொன்னூற்று ஆறு. இன்னமும் கிழங்கு மாதிரி இருந்தாள்.

பாட்டியின் பெயர் வேறு.ஆனால் எப்பொழுது சண்டை வந்தாலும்" எனக்கு என்ன இருக்கு..வேண்டாம்ன்னு தீர்மானம் பண்ணேன்னா கிளம்பி காசி போயிடுவேன்.. அங்க ஒரு மூலையில உட்கார்ந்த ஒரு உருண்டை சாதம் கிடைக்காதா?"என்பாள்.அதனால் அவர் பெயரே காசி பாட்டி என்றாகி விட்டது.

என்னைப் பார்த்ததும் " ஸ்ரீதரா .. எங்கடா போனே , சந்தானத்துக்கு சொல்லிட்டியா ?" என்று கூப்பிட்டா ள். வந்த உடன் செய்திகளை சேகரித்து விட்டாள் போல.

பக்கத்தில் போன என் கைகளை தன் தளர்ந்த சுருங்கிய கைகளால் பிடித்துக் கொண்டாள்.

" என்னடா பண்றே , உன் கல்யாணத்தை பார்த்துட்டு தான் கண்ணை மூடுவேன்னு சொன்னா ...மகராசி போயிட்டா..சந்தானம் சந்தானம்ன்னு மூச்சுக்கு மூச்சு சொல்வாளே அவன் வர வரைக்கும் வச்சிக்க முடியாதா ?"
"தூரத்திலே இருந்து கவனித்து கொண்டிருந்த அண்ணன் வந்து விட்டான்.

" நான் தான் சொன்னேனே பாட்டி ..வீட்டு ஓனர் ஒத்துக்க மாட்டார்ன்னு ..அவர் வீட்டுல சின்ன பொண்ணுங்க எல்லாம் இருக்கு ..ரெண்டு தடவை வந்து பார்த்துட்டு போயிட்டார்.."

" ஆமாம் "

அண்ணன் " உங்களை பின்னாடி கூப்பிடறா..காபி இருக்காம்.." 

பாட்டி எழுந்து போனாள்.

அண்ணன் ," வாத்தியாருக்கு சொல்லிட்டேன்..பணம் ஏதும் கொண்டு வந்தியா ?" என்றான்.

"ம் " என்றேன்.

அண்ணன் நகர்ந்து விட்டான்.

நான் அம்மாவின் உடலைப் பார்த்தேன்.

மதுரையில் இருக்கும் சகோதரர்கள் வீடு, அண்ணன் வீடு என மாறி மாறி இரண்டு மாசம் இருப்பாள். சந்தானம் மாதா மாதம் ஆயிரம் ரூபாய் அனுப்பி விடுவான். அதை பெருமையாக சொல்வார்.

" வேற யார் இப்படி சேசரா. ஒண்ணாம் தேதியான டான்னு பணம் கைக்கு வந்துடும்.." என்பாள். அப்படி சொல்லும் போது நான் எந்த பதிலும் சொல்ல மாட்டேன். என்ன சொன்னாலும் தவறாக போகும்.

வாத்தியார் வந்து விட்டார்.

" எண்டா எப்ப எடுக்கறதா இருக்கேள்...இன்னைக்கா நாளைக்கா முடிவு பண்ணிடேள்னா, முதல்ல இடு காட்டுக்கு பணம் கட்டி ரசித்து போட்டுண்டு வந்திடுங்கோ.. ஐஸ் பொட்டிக்கு சொல்லலையா..?" 

" ம்ஹும் .. ஐஸ் பாருக்கு ஆள் அனுப்பியிருக்கேன்.. மதுரையில இருந்து தம்பிங்க வந்ததும் இன்னைக்கே எடுத்துடலாம்ன்னு.."

" அவா எத்தனை மணிக்கு வந்து சேர்வா ?" 

" ஆறு மணிக்குள்ள வந்துடுவான்னு நினைக்கிறேன்.. பார்க்கலாம்.." 

" சரி ஒரு மூவாயிரம் கொடு மத்த வேலைகளை நான் பார்க்கிறேன்.. "என்றார் வாத்தியார்.

அண்ணன் என்னைப் பார்த்தான்.

" நான் பேங்க் திறந்ததும் எடுத்துண்டு வரணும்..உன்கிட்ட இருந்து மூவாயிரம் மாமாகிட்ட கொடு.. அப்புறம் கணக்கு பார்த்துக்காலம் " என்றான்.

" என் கிட்ட இரண்டாயிரம் தான் இருக்கு.."

" மன்னி கிட்ட இருக்க கேளு .. அவகிட்ட அப்புறம் தந்துக்கலாம் " என்றான்.

மன்னியிடம் பணம் ஆயிரம் வாங்கி கொண்டு என்னிடம் இருந்த பணத்தையும் சேர்த்து அவரிடம் கொடுத்தேன்.

அவர்" யாராவது ஒருத்தர் கணக்கு வட்சுகொங்கோ.. அப்பப்ப தேவைப் படும் " என்றபடியே போனார்.

வந்த சொந்த காரர்கள் எல்லாம் அம்மாவை பற்றி விசாரித்து விட்டு அடுத்து 'ஏன் கல்யாணம் பண்ணிக்கலை 'என்று என்னை துக்கம் விசாரித்தார்கள்.

நேரம் கரைய கரைய டென்ஷனில் தலை வலிக்க ஆரம்பித்தது.பின் புறம் போய் அங்கே கொதியில் இருந்த காபியை எடுத்து குடித்தேன்.

வீட்டு ஓனர் வந்தார்.

" உங்க அண்ணா சந்தானம் என்னோட லைனுக்கு போன் பண்ணினார்.. நாளைக்கு ராத்திரிதான் ப்ளைட்டாம்.. டெல்லி வந்து அங்க இருந்து மாறி வரணுமாம்... உங்க அண்ணா கிட்ட சொல்லிடுங்கோ ..ஆமாம் இன்னைக்கு எடுத்துடுவேள் இல்ல "

நான் அவரைப் பார்த்தேன். அவர் கவலை அவருக்கு.

" ம் எடுத்துடுவோம் " என்றேன்.

ஹாலில் சம்பத் ,சாரி பேச்சுக் குரல் கேட்டது.வந்து விட்டார்கள் போல் இருக்கிறது.சம்பத் நிச்சயம் கொஞ்ச நேரத்தில் பின்னாடி வருவான்.காபி குடிக்காமல் இருக்க அவனால் முடியாது.

சரியாய் வந்து விட்டான்.

" என்னடா நீ இங்க தான் இருக்கியா.. "

அவனிடம் ஒரு டம்பளர் காபியை எடுத்து கொடுத்தார் பரிசாரகர்.

"ஏண்ணா " என்ற படியே சின்ன மன்னியும் அங்கு வந்து விட்டாள்.ஒரு நிமிடம் அவனை தனியாய் யாருடனும் பேச விட மாட்டாள்."

" ஸ்ரீதர்.. அம்மாக்கு உன் கல்யாணத்தை பார்க்கணும்னு ஆசை , போன மாசம் வந்திருந்தபோது கூட சொன்னா..எனக்கு என்னமோ தோணித்து..இன்னும் ஒரு வாரம் இருந்துட்டு போங்களேன்னு?பெரியவனைப் பார்க்கணும்ன்னு கிளம்பி வந்துட்டா"

வாத்தியார் குரல் தான் பிரதானமாய் கேட்டது.

" எல்லோரும் முடி எடுத்துட்டு தலையில தண்ணி ஊதிண்டுடேளா" 

"ம்." என்றோம்.

"இங்க வா "

புடவையின் ஒரு முனை அம்மாவின் மேல் கிடந்தது.இன்னொரு முனையைப் பிடித்து என் கையில் கொடுத்தார்.

" இத அப்படியே வாசல் படியில கொண்டு போடு.."

போட்டேன்.

வெளியில் மூங்கில் தயாரக இருந்தது. வேனும் நின்று கொண்டிருந்தது.

அண்ணன் என்னைப் பார்த்தான்.

" நீ அம்மா கூட வேன்ல வந்துடு.. நாங்க முன்னாடி கார்ல போயிடறோம் ?"

"ம்"

வேனில் ஏற்றியதும் எல்லோரும் காருக்கு பாய்ந்தார்கள்.

நான் வேனில் அம்மாவின் பாடைக்கு அருகில் உட்கார்ந்தேன்.

" என்ன எல்லோரும் மாறி மாறி பந்தாடறா? இங்க ரெண்டு மாசம் ,அங்க ரெண்டு மாசம்ன்னு,சமைக்கவும் விட மாட்டேன்கறா ..ஒண்ணும் சரியில்ல "

அந்த நாள் எனக்கு நினைவில் வந்தது.

அன்று சனிக்கிழமை.

வீட்டில் துணி துவைத்து கொண்டிருந்தேன்.

கதவை தட்டும் ஓசை.

திறந்தேன்.

அம்மா!

" உள்ள வாம்மா "

" எப்படிடா இருக்கே , கோவிலுக்கு போறேன்னு சொல்லிண்டு வந்திருக்கேன்.. உன்னை பார்க்க வரேன்னு தெரிஞ்சா தேவை இல்லாத கேள்வி எல்லாம் கேட்பா அந்த ராட்சஸி ..வாய்க்கு இதமா சாப்பிட்டு இரண்டு வருஷம் ஆறது.. கொஞ்சம் வேப்பம் பூ ரசம் பண்ணி அப்பளாம் சுட்டு தாடா ?"

" நல்ல மணமா பண்றே.. ஒரு வேளை சமைக்க தெரியாம இருந்தா கல்யாணத்தைப் பண்ணிடுருப்பியோ?" என்னமோ..?

நான் எந்த பதிலும் சொல்லவில்லை.

போகும் போது ஒரு டம்ப்ளரில் ஊற்றி தரச் சொல்லி வேப்பம் பூ ரசத்தை குடித்து விட்டு போனாள். அதன் பின் இப்பொழுதுதான் பார்க்கிறேன்.

இடும் காடு வந்து விட்டது.

வேனில் இருந்து இறக்கி தயாராக இருந்த சிதையை நோக்கி தூக்கிப் போனோம்.

நான் கால் மாட்டில் ஒரு பக்கம் பிடித்திருந்தேன்.

சிதையை நெருங்கும் போது தான் கவனித்தேன்.

நான் பிடித்திருந்த பக்கம் அம்மாவின் காட்டை விரல் துணி தாண்டி வெளியல் தெரிந்தது. அது மெல்ல அசைந்தது. எனக்கு தூக்கி வாரி போட்டது. 

பிரமையோ. இல்லை உண்மைதான். உயிர் போகவில்லை.

வேறு யாரும் கவனிக்கவில்லை.

" எப்படிடா இருக்கே , கோவிலுக்கு போறேன்னு சொல்லிண்டு வந்திருக்கேன்.. உன்னை பார்க்க வரேன்னு தெரிஞ்சா தேவை இல்லாத கேள்வி எல்லாம் கேட்பா அந்த ராட்சஸி .. வாய்க்கு இதமா சாப்பிட்டு இரண்டு வருஷம் ஆறது.. கொஞ்சம் வேப்பம் பூ ரசம் பண்ணி அப்பளாம் சுட்டு தாடா ?"

அம்மா சொன்னது நினைவிற்கு வந்தது.

சடுதியில் கோட்டி துணியை இழுத்து விட்டேன்.விரல்கள் வெளியே தெரியாதவாறு மூடினேன்.

சாம்பலாக இன்னும் சில வினாடிகள் தான்...!

காதல்

வேலை நிமித்தமாய் இரவு நேரத்தில் பேருந்தில் ஒரு பயணம்!
சினுங்கியது கைப்பேசி!
தொடர்புக்கு போனேன் மயான அமைதி!
யாரென்று கேட்டேன் ஒரு பதிலும் இல்லை!
அழைப்பை துண்டிக்கப் போகும் பொழுது "ஹலோ", !
இதயத்தின் அழுகை ஆரம்பமான இடம்!ஆண்டுகள் கழிந்தும் அவளின் அழகிய குரல்!
"எப்படி இருக்க" என்று அவள் கேட்டதது தான் தாமதம்!

பெண்

1.) எனது இரண்டாவது
குழந்தையை
வயிற்றில் சுமக்கும்
முதல் குழந்தை ... !

- மனைவி


2.) முதல் குழந்தை பெண்ணாக பிறந்தால் இரண்டாவது குழந்தைக்கு இரண்டு அம்மாக்கள்...! 

தகுதிகள்

முதல் காதலை அடைய நினைக்கும் போது
தகுதிகள் இருப்பதில்லை ...!

எல்லா தகுதியும் கிடைக்கும் போது 
முதல் காதல் இருப்பதில்லை ...!

காதலில் பெண்

ஒரு ஆண் காதலில் தோற்றுவிட்டால், கவிதை எழுதலாம், கதை எழுதலாம். சினிமா எடுக்கலாம். ஏன் மனைவியிடம் தன் பழைய காதலைக் கூறி, `என் புருஷன் எதையும் எங்கிட்ட மறைக்க மாட்டாரு’ என்று நல்ல பெயர் கூட எடுக்கலாம். ஆனால் பெண்கள்…?

ஊர் உறங்கிவிட்ட இரவில், ஜன்னல் வழியே தெரியும் ஆகாயத்தை வெறித்தபடி கண்ணீர் விடுவதைத் தவிர, வேறொன்றும் செய்ய இயலாது...!

மகாபாரதம்...!

மகாபாரத யுத்தத்தில் தன்னுடைய ஆசிரியர் துரோணரின் மீது அம்பு தொடுத்தான் அர்ச்சுனன்.

அந்தச் செய்தி கேட்டு ஏங்கி அழுதான் ஏகலைவன்.

“இந்தப் பாண்டவர்கள், எனக்கும், அவர்களுக்கும் ஆசிரியரான துரோணரைக் கொன்று விட்டார்களே!