Search This Blog

26 April 2013

ஒரு சில நிமிடங்களில் குழந்தை தாயாகி.. தாய் குழந்தையாகி...

எல்லா குழந்தைகளின் ஒரே வேண்டுதல் அம்மா எப்போதும் என்னுடன் இருக்கவேண்டும் என்பதே.... இந்த காலக்கட்டத்தில் அம்மா அப்பா இருவருமே வேலைக்கு சென்றால் குழந்தைகளுக்கு தேவையான வசதிகளை கல்வியை தரமுடியும் என்ற நம்பிக்கையினால் உழைப்பு இருவரின் பங்காகிறது....

ஆனா யாருக்காக உழைக்கிறோமோ அந்த குழந்தைக்கு தேவையான பாசத்தையும் அன்பையும் அரவணைப்பையும் நம்மால் கொடுக்கமுடிகிறதா என்றால் இல்லை என்றுத்தான் சொல்ல இயலும்…

நிலா காட்டி சோறு ஊட்டிய அம்மாக்கள் அந்தக்காலம் குழந்தைகளுக்கு நல்ல கதைச்சொல்லிகளாக இருந்து கற்பனையில் நம்மை வேறு உலகத்துக்கு கூட்டிச்செல்வார்கள்… நம்முடனே இருப்பார்கள்…


குழந்தையின் மனதை நம்மால் ஆராயமுடியாது. அதன் மனதில் என்ன இருக்கிறது என்று அறியமுடியாது.. அப்படி அறியமுயன்றால்.. குழந்தைகளின் மனதில் ஏக்கம் மண்டி இருக்கும் கண்டிப்பாக…

நமக்கு சோறு ஊட்டுவாளா? நம்மை பாட்டுப்பாடி தூங்க வைப்பாளா? பட்டு செல்லம் எங்க போயிட்டே அப்டின்னு நாம விளையாட்டா ஒளிஞ்சுக்கிட்டா தேடுவாளா? நம்ம கூட விளையாடுவாளா? நாம அழும்போது சட்டுனு வந்து தூக்கி வெச்சு நம்மை சமாதானப்படுத்துவாளா? நாம சிரிக்கும்போது உடன் சேர்ந்து சிரித்து மகிழ்வாளா? தூங்கி கண் விழிக்கும்போது நம்மை அணைத்தபடி நம் அம்மா அருகே படுத்திருப்பாளா? கனவுகளில் கூட அம்மா அப்பாவுடன் கைக்கோர்த்துக்கொண்டு… தினமும் மாலை அம்மா அப்பாவுடன் நடைப்பழகிக்கொண்டு… இப்படி எத்தனை எத்தனையோ…

செலவுகள் அதிகரிக்க அதிகரிக்க…. குடும்பச்சுமையில் இருந்து கொஞ்சம் தப்பிக்க வேலைக்கு செல்வது அவசியமாகிவிடுகிறது…

கிராமமாகட்டும் நகரமாகட்டும்.. எங்கும் குழந்தைகள் அம்மா அப்பாவை அடுத்து இருந்து தன்னை கொஞ்சுவதையும் தனக்கு சோறு ஊட்டி விளையாட்டு காண்பித்து கதைகள் சொல்லி தூங்க வைக்கவேண்டும் என்று விரும்புகின்றது…

அது முடியாது இல்லை என்று ஆகும்போது கிடைக்காதபோது… அதன் செயல்களும் பேச்சும் வித்தியாசமாகிறது… ஏக்கம் அதிகமாகிறது. அதனால் வேறு மாதிரி சிந்திக்கிறது.. ஏதாவது பொய்ச்சொல்லியாவது அம்மா அப்பாவை தன்பக்கம் இருத்திவைத்துக்கொள்ள முயல்கிறது…முடியாதபோது மூர்க்கமாகிறது… கால் உதைத்துக்கொண்டு தரையில் புரண்டு அழுகிறது…

வாரத்திற்கு ஒருநாள் குடும்பத்திற்காக செலவு செய்யவேண்டும்.. அன்று முழுவதும் குழந்தைகளுடன் குடும்பத்துடன் ஒன்றாய் அமர்ந்து உண்டு கதைப்பேசி சிரித்து மகிழ்ந்து மனதில் உற்சாகத்தை ஏற்றிக்கொள்ளவேண்டும்… வாரத்தின் மீதி நாட்கள் இந்த சந்தோஷத்தில் கழியும்… விடுமுறைக்காக ஏங்கி காத்திருக்கும்..




No comments:

Post a Comment