Search This Blog

26 April 2013

காதல்

வேலை நிமித்தமாய் இரவு நேரத்தில் பேருந்தில் ஒரு பயணம்!
சினுங்கியது கைப்பேசி!
தொடர்புக்கு போனேன் மயான அமைதி!
யாரென்று கேட்டேன் ஒரு பதிலும் இல்லை!
அழைப்பை துண்டிக்கப் போகும் பொழுது "ஹலோ", !
இதயத்தின் அழுகை ஆரம்பமான இடம்!ஆண்டுகள் கழிந்தும் அவளின் அழகிய குரல்!
"எப்படி இருக்க" என்று அவள் கேட்டதது தான் தாமதம்!

என் இதயத்தின் வலிக்கு கண்ணீர் ஒத்தடம் கொடுத்துக் கொண்டிருந்தது என் விழிகள்!
சுதாரித்துக் கொண்டு "என்ன என்றேன்" அவள் பழங்கதை பேச என் மூளை இதயத்தின் கடைசி அறையில் கிடந்த அவள் நினைவு புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருந்தது!
நான் கேட்டேன் "எப்படி போகுது உன் life" அவள் ஊமையானாள்!
அவளின் மௌனம் மட்டும் என்னிடம் ஆத்மாவை தொலைத்து வாழ்ந்துக் கொண்டிருக்கிறேன ் என்றது!
நான் மீண்டும் கேட்டேன் "எப்படிபோகுது உன் life" மௌனம் கலைந்தது அவள் அழுகையின் சத்தத்தில் இந்த பூமியும் விழித்தது!
அவள் கண்ணீரில் அந்த கங்கையும் புனிதம் அடைந்தது!
நான் அவளை சமாதானப் படுத்தினேன் அவளோ "சாரி டா""சாரி டா" என்றபடி நேரங்கள் கடந்தது!
அவள் "திருமணம் செய்துக்கோ என்றாள்" சரி உன் நினைவுகள் என்னிடம் தான் இருக்கிறது என்றேன்!
அவளுக்கு புரியவில்லைப் போல!"சரிடா நான் வைக்கட்டுமா" என்றாள்!
"ம்ம் என்றேன்" அவளின் அழைப்பு துண்டிக்கப்பட்ட து!
என் நினைவுகள் மீண்டும் பூக்கத் தொடங்கியது!
எத்தனை ஜென்மம் என்றாலும் நான் உன்னையே மீண்டும் காதல் செய்ய வேண்டும் என்று கண்ணீர் துடைத்து பேருந்தை விட்டு இறங்கினேன்!
அழகாக நடக்கத் தொடங்கினேன் அவள் நினைவுகளுடன்!
நன்றி உன் நினைவுகளுக்கு...!

No comments:

Post a Comment