சில நாட்களுக்கு முன்பு எனக்கு ஒரு குறுந்தகவல் வந்தது.
Today is “heart2heart talk” day. U can ask me any question that u wanted to ask for a long time and i will reply. REPLY MUST. Forward this to your friends and get interesting questions.
மிக சுவாரசியமாக இருக்கவே நானும் என் நண்பர் நண்பிகளுக்கு அனுப்பினேன். சொல்லி வைத்தது போல எல்லோரும் ஒரே விஷயத்தை பற்றியே கேட்டார்கள்.
காதல்!!
“நீ யாரையாவது காதலிக்கிறாயா?”, “உன்னுடைய முதல் கிரஷ் யார்?”…. இப்படி பல கேள்விகள்.
மத்த சமயங்களில் யாருமே இந்த கேள்வியை கேட்கவில்லை. கேட்டால் பதில் கிடைக்கும் என்ற நம்பிக்கை யாருக்கும் இல்லை.
இதிலிருந்து எனக்கு ஒன்று நன்றாக புரிகிறது. நாம் காதலை மிக ரகசியமானதொரு விஷயமாக ஆக்கிவிட்டோம். இல்லையா?
நான் காதலை தம்பட்டம் அடித்துக்கொள்ள வேண்டுமென்று சொல்லவில்லை. ஆனால் ஒரு பாவத்தை போல அதை மறைக்க வேண்டிய அவசியம் ஏன் என்று தான் வியக்கிறேன்.
ஏன்??
இதற்கு விடை யோசிப்பதற்கு முன்னால் ஒரு சின்ன analysis. காதலைப் பற்றிய தெளிவான சிந்தனை நமக்கு இருக்கிறதா??
என் நண்பர் வட்டத்தை மூன்று விதமாக என்னால் பிரிக்க முடியும். முதல் பிரிவு, காதலுக்கு ஜே போடுபவர்கள்! இரண்டாம் பிரிவு காதலுக்கு NO சொல்பவர்கள். மூன்றாவது, காதலுக்கும் காமத்துக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள். இவர்களைப் பற்றி நாம் இங்கே பேசப்போவதில்லை. ;)
இரண்டாம் பிரிவில் இருக்கிற காதலுக்கு நோ சொல்கிறவர்களை இப்படி இன்னும் பிரிக்கலாம்.
1. காதலிக்காமல் இருப்பது பெற்றோருக்கு உண்மையாக இருப்பதின் அடையாளமாக கருதுபவர்கள் – தம் பிள்ளைகள் தங்களின் loyaltyஐ நிரூபிக்க காதலிக்காமல் இருக்க வேண்டும் என்று எண்ணுகிற பெற்றோர் இருக்கிற வரை, இவர்களை யாரும் குற்றம் சொல்ல முடியாது.
2. காதல் வெற்றிக்கு தடை எண்ணுபவர்கள் – காதலை தொல்லையாக நினைப்பவர்கள் காதலித்து என்ன பயன்??
3. “சீறும் பாம்பை நம்பு! சிரிக்கும் பெண்ணை நம்பாதே!”,”எல்லா ஆண்களும் ஏமாற்றுக்காரர்கள்!” – இப்படியெல்லாம் பேசிக்கொண்டு திரிபவர்கள். Hasty Generalisations! இதில் பாதி பேர் காதலில் தோல்வியுற்றவர்கள்(ச்சீ! இந்த பழம் புளிக்கும்! :)
4. மேற்படி வசனங்கள் எல்லாம் பேசாமல் புதுவிதமாக, காதலிக்காமல் இருப்பது no nonsense business என்று நினைப்பவர்கள். காதலிக்காமல் இருப்பது fashion ஆக நினைப்பவர்கள். இதில் பாதிப்பேருக்கு “நமக்கெல்லாம் வாய்க்காது” என்ற ஆயாசத்தில் இருப்பவர்கள்.
இந்த மேற்கண்ட பிரிவினர், இப்படியே பேசிக்கொண்டு திரிந்து விட்டு, ஒரு நாள் திடீரென காதலில் விழுந்தால், நிச்சயம் அதை ரகசியமாக வைத்துக்கொண்டு தான் ஆக வேண்டும். இல்லையென்றால் சுற்றியிருப்பவர்கள் கட்டை எடுத்து அடிப்பார்கள்!
முதல் பிரிவில் இருக்கிற காதலுக்கு ஜே போடுகிறவர்கள் இப்படி இன்னும் பிரிக்கலாம்.
1. காதலித்து விட்டால் ஏதோ ஆகாயத்தையே பிடித்து விட்டதாக நினைப்பவர்கள். காதலிக்க தொடங்கியவுடன் அப்படியே அந்நியன் ரேஞ்சுக்கு ஆள் மாறி விடுவார்கள். காதலே வாழ்க்கை, காதலே ஜெயம் என்றெல்லாம் பிதற்றுகிற கும்பல். Love is a sweet poison என்பது இவர்களின் favourite dialogue. ரயில்வே ஸ்டேஷன் தொடங்கி எல்லா இடத்திலும் love exhibition நடத்துபவர்கள். ஒரு வேளை இவர்களின் காதல் கைகூடவில்லையென்றால் straight to இரண்டாம் பிரிவு (3)!!
2. சினிமாவில் வருகிற ஹீரோவின் நண்பர் கதாபாத்திரம் போன்றவர்கள். அவர்கள் காதலிக்கவே மாட்டார்கள். சுற்றி இருப்பவர்களை நன்றாக உசுப்பேற்றி விடுவார்கள். கடைசியில் எஸ்கேப்!
இவர்கள் காதலை ரகசியமாக வைத்துக்கொள்ளாதது தான் பிரச்சினையே.
இந்த அனைத்து பிரிவினரும் இப்படி ஒரு எண்ணத்தை உருவாக்கி கொள்ள அதி முக்கியமான காரணம், தமிழ் சினிமா! என்றுமே அதில் காதல் காதலாக காட்டப்படுவதில்லை(சில விதிவிலக்குகள் உண்டு!). நான் பார்த்து இதுவரை எந்த ரயில் நிலையத்திலும் காதலி, மெதுவாக கிளம்புகிற ரயிலில் பரிதாபமாக (இறங்காமல்!!) கையை நீட்டிக்கொண்டிருக்க, காதலன் தட்டு தடுமாறி ஓடுகிற காட்சி அரங்கேறவில்லை!
மற்ற காரணங்கள், அவர்களின் வீட்டு சூழல், இதுவரை பார்த்த கேட்ட காதல் கதைகள் இத்யாதி இத்யாதி…
எஞ்சியுள்ளவர்கள் இப்படி நிலவைப் பிடிப்பேன், காற்றை நிறுத்துவேன் என்றெல்லாம் வசனம் பேசாமல், காதல் என்றால் காதலிப்பது, என்ற தெளிவான சிந்தனை இருப்பவர்கள். (என் நண்பர் வட்டத்தில் ஒரு ஆறு ஏழு பேர் இப்படி என்று வைத்துக்கொள்வோம்.) இதில் இருக்கும் அனைவருமே காதலை ரகசியமாகவே வைத்திருக்கிறார்கள்.
யாரிடமும் சொல்ல அவசியமில்லை என்பது உண்மை. ஆனால் இவர்கள் வெளியே தெரியக்கூடாது என்று பயப்படுவது தான் சங்கடமாக இருக்கிறது.
இது அவர்களின் தவறா, இல்லை சுற்றி இருப்பவர்களின் தவறா? எனக்கு புரியவில்லை.
“எல்லாம் சரிப்பா…. இவ்வளவு வாய் கிழிக்கிறியே…. நீ எந்த category….அந்த smsக்கு என்ன reply பண்ணே…”என்று தானே கேட்கிறீர்கள்??
ஹி ஹி… மழுப்பி விட்டேன்!!
சும்மாவா சொன்னார்கள், “ஊருக்கு தான் உபதேசம் என்று”!! ;)

samy mudiyalada
ReplyDelete