ஒரு ஆணும் பெண்ணும் நண்பர்களாக இருப்பதில் பல்வேறு இடையூறுகள் இருப்பதை நான் யாழினியிடம் விளக்கியிருக்கிறேன். அவற்றை ஒரு பொருட்டாகவே அவள் மதித்ததில்லை. யாழினி என் மீது அளவு கடந்த அன்பும் மரியாதையையும் வைத்திருக்கிறாள். ஆரம்பத்தில் இதை நான் உணரவில்லை. ரயில் ஸ்நேகம் போல இதை ஆபீஸ் ஸ்நேகம் என்று நினைத்திருந்தேன். ஆனால் அவள் அப்படி நினைக்கவில்லை.