Search This Blog

29 October 2015

அதியமானின் தோழி... !

     ஒரு ஆணும் பெண்ணும் நண்பர்களாக இருப்பதில் பல்வேறு இடையூறுகள் இருப்பதை நான் யாழினியிடம் விளக்கியிருக்கிறேன். அவற்றை ஒரு பொருட்டாகவே அவள் மதித்ததில்லை. யாழினி என் மீது அளவு கடந்த அன்பும் மரியாதையையும் வைத்திருக்கிறாள். ஆரம்பத்தில் இதை நான் உணரவில்லை. ரயில் ஸ்நேகம் போல இதை ஆபீஸ் ஸ்நேகம் என்று நினைத்திருந்தேன். ஆனால் அவள் அப்படி நினைக்கவில்லை.

24 July 2015

எனது ஆசை...!

          காலையில் அவளை முத்தமிட்டு எழுப்பி ஒரு காஃபி கொடுத்தால் போதும், இரவு நான் உறங்கும் வரை எனக்குத் தேவையானதைச் செய்ய பம்பரமாய் சுழல்வாள்.
     * பின்னிருந்து அணைத்தபடியே அவளுக்கு சமையல் கற்றுக் கொடுக்கிறேன், என் ஆசையெல்லாம் அவள் கற்றுக்கொள்ளக் கூடாது என்பதுதான்.!!

09 May 2015

வயதின் வாழ்க்கை...!

 இருபதுகளில்...

எழு!

உன் கால்களுக்கு

சுயமாய் நிற்கச் சொல்லிக் கொடு!

ஜன்னல்களைத் திறந்து வை!

படி! எதையும் படி!

வாத்சாயனம் கூடக்

காமமல்ல, கல்விதான்..

படி!

பிறகு

03 May 2015

இப்படி ஒரு கணவன் + மனைவி இருந்தால் ..?

1.எண்ணங்கள் வெவ்வேறாக இருந்தாலும், ஒருவர் எண்ணத்திற்கு ஒருவர் மதிப்பு தந்து சொல்வதை காதில் வாங்க வேண்டும்.

2. கணவன் மட்டுமே வேலைக்கு செல்லும் வீட்டில், தன்னால் தான் குடும்ப பொருளாதாரம் இயங்குகிறது என்பதை எப்போதும் கணவன் வார்த்தைகளில் வெளிப்படுத்தக் கூடாது.


3. மனைவியும் வேலைக்கு செல்லும் வீட்டில், நானும் தான் வேலைக்கு போறேன் என்ற வார்த்தையை மனைவி அடிக்கடி சொல்லக் கூடாது.

09 April 2015

ஆண் அழகு ...!

ஆண்கள் என்னதான் கம்பீரமாக நடந்தாலும் அழும் குழந்தையை அடக்க அவனுக்குள்ளும் ஒரு மென்மையான பெண்மை இருக்கின்றது...!

27 March 2015

நன்றி டோணி....!

    மிகக் கடினமான டூர்... போன வருஷம் கிளம்பிப் போனது.. கிட்டத்தட்ட நான்கு மாதங்கள். டெஸ்ட், ஒரு நாள் தொடர், உலகக் கோப்பை... கெடுபிடியான, உருப்படியான ஓய்வு இல்லாத.. எப்போதும் பந்தும், கையுமாக... கடுமையான நாட்கள்... எல்லாவற்றுக்கும் மத்தியில் டோணி, உங்கள் முகம்.. அந்த பெருமையைப் பெறத் துடித்துப் போராடிய அந்த முகம்... அது மட்டும்தான் தெரிகிறது டோணி.. உங்களுக்கு நிறைய நன்றி சொல்ல வேண்டும்.. ஆனால் அதற்கு முன்பு உங்களிடம் நிறையப் பேச வேண்டும்.. !