Search This Blog

08 March 2014

நகைச்சுவை...!

புதிதாக வேலைக்கு சேர்ந்தவன் எக்ஸ்டென்சன் தொலைபேசி மூலம் கேன்டீனைத் தொடர்புகொண்டான்.

“ஏய், சூடாக ஒரு கப் காப்பி வேண்டும். உடனே அனுப்பு!” எதிப்புறம் இருந்து பதில் சூடாக வந்தது. நீ தவறான எக்ஸ்டென்சனைக் கூப்பிட்டிருக்கிறாய்! “இடியட், நான் யார் தெரியுமா ?உன் கம்பெனியின் மேனேஜிங் டைரக்டர்..!”

இடியட் என்ற வார்த்தையால் சூடாகியவன், “அடி முட்டாளே, நீ யாரோடு பேசிக்கொண்டிருக்கிறாய் என்று தெரிந்துதான் பேசுகிறாயா?” என்றான். “எப்படித் தெரியும்? எக்ஸ்டென்சன் நம்பரை நான் கவனிக்கவில்லை! சீக்கிரம் சொல் யார் நீ?”

“இந்தக் கம்பெனியிலேயே பெரிய இடியட் நீதான்!” என்று சொல்லியவன், இணைப்பைப்
படாரென்று துண்டித்து விட்டு, நெஞ்சில் கைவைத்துக் கொண்டு சொன்னான் “கடவுளே, கோடி நன்றி..!”


No comments:

Post a Comment