இந்த நூற்றாண்டின் தவிர்க்க முடியாத இந்திய சினிமாவாக பாகுபலி இடம் பிடித்தாகி விட்டது. யாரும் மறுக்க முடியாது. படத்தில் குறைகள் இல்லாமல் இல்லை. பாகுபலியும் பல்வாள்தேவனும் இயற்பியல் விதிகளை மீறும் வல்லமை படைத்தவர்கள் என்று முதல் பாகத்திலேயே தெரிந்து விட்டதால் அதை பற்றி பேசுவதும் வீண். நான் பேச விரும்புவது படத்தில் சரியாக சொல்லப்படாத விசயங்களை.
