Search This Blog

20 July 2016

படைப்பானவள் ...!

​​‘ஏன் இன்னைக்கும் பத்து ரூபா டிக்கெட்ல படத்துக்கு கூட்டிட்டு போற… காசா இல்ல நம்மகிட்ட’

‘ஒரு உழைப்ப… ஒரு படைப்ப பக்கத்துல வச்சு ரசிக்குறேன்னு வச்சுக்கோ!’

‘நான் உழைப்பா படைப்பா?’

‘உழைப்புல உ… படைப்புல ப ‘

‘ஆரம்பமா! சரி… அப்போ முடிவு?’

10 July 2016

இசை மன்னர் எம் எஸ் வி...!

  1940 களில் குடும்ப வறுமையால் சினிமாவில் நுழைந்து , அந்தக் கால இசையமைப்பாளர்களின் அரவணைப்பை பெற்று, இசை உதவியாளராக உயர்வு பெற வெறும் அனுதாபம் மட்டும் காரணமாக இருக்கவில்லை. இயல்பான ஆற்றலும் , இசை மீதான தீராத காதலுடன் தான் அவரது இசை வாழ்வு தொடங்கியது.

  ‘பூ மாலையில் ஓர் மல்லிகை/ இங்கு நான்தான் தேன் என்றது’ என்கிற பாடல் காதுகளுக்கு தந்த தித்திப்பைப் போன்று எந்தப் பழங்களும் என் வாய்க்குத் தரவே இல்லை. நின்று நிதானித்துப் பார்க்கும்போது - இன்று நாற்பதைத் தாண்டியிருக்கும் தமிழர்களின் வாழ்க்கைப் பொழுதுகளில் ஒரு சென்டி மீட்டர் இசை மழையையாவது பொழிந்திருப்பார் எம்.எஸ்.வி.