Search This Blog

28 June 2016

தமிழ் வாலி ...!

                                                        

                                    
     இன்னும் ஒரு கனவுபோலத்தான் இருக்கிறது கவிஞர் வாலி இப்பூவுலகைவிட்டு விண்ணுலகு சென்றது. திரைப்பட பாடலாசிரியர், எழுத்தாளர், நடிகர், இயக்குனர் என பன்முகங்களை கொண்ட கவிஞர் வாலியின் சாதனை வரலாறு ஒரு பக்கத்தில் அடங்கிவிடக்கூடியதா..?     

   பதின் பருவக் காலத்தில் , வீட்டு ரேடியோவில் பெரும்பாலும் அப்பாவும் அம்மாவும் விரும்பிக் கேட்பது பழைய பாடல்களாகத் தான் இருக்கும் . அப்போதைக்கு "பழைய பாடல்களை எழுதியவர் " என்று எனக்கு தெரிந்த ஒரே கவிஞர் கண்ணதாசன் . எனவே கேட்கும் பாடல்கள் அனைத்தும் கண்ணதாசன் எழுதியது தான் , இசையமைத்தது எம்.எஸ்.வீ தான் என்று நினைத்துகொள்வேன் . விழுப்புரத்தில் ஒரு பட்டிமன்றம் . லியோனி தலைமையில் . நான் லியோனியின் பட்டிமன்றம் பார்ப்பது அது தான் முதல் முறை . "எப்படி எப்படி சமஞ்சது எப்படி ..." என்ற பாடலை மேற்கோள் காட்டி எழுதிய கவிஞரை பெயர் சொல்லாமல் வெளுத்து வாங்கினார் லியோனி . ஆனால் எனக்கு அதன் பிறகு தான், யார் அந்த பாடலை எழுதி  இருப்பார் என்று ஆவல் பொருக்க முடியாமல் , பக்கத்தில் உக்காந்திருந்த முகம் தெரியாத ஒருவரிடம் கேட்டேன் . "வாலி" என்று பதில் வந்தது . வாலி என்ற கவிஞர் பெயர் எனக்கு இப்படியாகத் தான் முதல் அறிமுகம் .