தோனிக்கு வாய்ப்புகளை அள்ளித்தந்த சூழலோ, தங்கத்தட்டில் கிரிக்கெட் நுழைவோ அவருக்குச் சத்தியமாகத் தரப்படவில்லை. பீகார் அணியில் அவர் ஆடி ஆடி அணி தோற்றுப் போன போட்டிகளின் கதைகள் நமக்குத் தெரியாமல் இருக்கலாம். இரவுகளில் கண்கள் சிவக்க டிக்கெட்களைப் பரிசோதித்துவிட்டு பயிற்சிக்கு போன பொழுதுகளை அவரின் ஆறு சதங்கள் சொல்லிவிடாது.
