Search This Blog

27 March 2015

நன்றி டோணி....!

    மிகக் கடினமான டூர்... போன வருஷம் கிளம்பிப் போனது.. கிட்டத்தட்ட நான்கு மாதங்கள். டெஸ்ட், ஒரு நாள் தொடர், உலகக் கோப்பை... கெடுபிடியான, உருப்படியான ஓய்வு இல்லாத.. எப்போதும் பந்தும், கையுமாக... கடுமையான நாட்கள்... எல்லாவற்றுக்கும் மத்தியில் டோணி, உங்கள் முகம்.. அந்த பெருமையைப் பெறத் துடித்துப் போராடிய அந்த முகம்... அது மட்டும்தான் தெரிகிறது டோணி.. உங்களுக்கு நிறைய நன்றி சொல்ல வேண்டும்.. ஆனால் அதற்கு முன்பு உங்களிடம் நிறையப் பேச வேண்டும்.. !