Search This Blog

31 December 2019

கனவில் தொலைந்த பயணம்..!

          எதிர்பார்க்காத நேரத்தில் வருவதில் மழை விளையாட்டுப் பிள்ளை..... சிலமுறை  கனவுகளோடு வரும், பலமுறை கனவுகளைக் கலைத்தபடி வரும். அன்றும் அப்படித்தான் வந்தது.... பேருந்துக்காக காத்திருக்கும் எனக்கு அது எப்படி இருந்தது தெரியுமா ...?

   மழை எப்பொழுதுமே கொஞ்சம் சுவாரஸ்யத்தையும் குளிர்ச்சியையும் சேர்த்து கொள்கிறது. அலுவலக வேலையை முடித்து கொண்டு இரவு பத்து தாண்டிய மணித்துளியில்தான் கோவைக்கான கிளம்பலுடன் பேருந்து நிலையம் நோக்கி வந்தேன்,  ஏனோ அத்தனை கூட்டம்.. மெல்ல ஆரம்பித்த மழை, மெள்ள தொடங்கியது. சில்லென்ற மழை சிலிர்க்க ஆரம்பித்திருந்தது. முகம் துடைத்தபடி பேருந்துகள் வருவதும் மக்களை அள்ளிக்கொண்டு செல்வதும், அந்த காட்சி பொம்மைப் பேருந்துகளில் தொற்றிக்கொண்டிருக்கும் எறும்புகள் போல இருந்தது. தலையில் தண்ணீர் படாத மாதிரி ஒரு சுவரோரம் ஒளிந்து நின்று கொண்டிருந்தேன்..
இந்த மழை, கனவை கலைக்க வந்த மழை மாதிரி தெரியவில்லை. கனவைக் கண்டும் காணாமல் போகும் ஒரு பயண சாலையில் குலுங்கும் மஞ்சள் நிற பூக்கள் போல வந்து கொண்டிருந்தது. 

27 July 2018

மண்...!

     நீர்,நெருப்பு என இரண்டையும் தன்னுள் அடக்கி, தன்னை தொட்டே தன்  பலத்தினை நிரூபிக்க முடியும் என வாயுவிற்கும் வாய்ப்பளிக்கும் இம்மண்ணை அத்தனை சாதாரணமாக எண்ணிவிட முடியாது. இங்கு அனைத்திற்கும் காரணம் மண்தான். மண் தொட முடியாத ஒரே விஷயம், ஆகாயம் மட்டுமே. அதுவும் இறப்பிற்கு பின் மட்டுமே அடைய முடியும்.

     உலகின் அத்தனை செயல்களுக்கும் ஆதாரமாய் நிற்பது மண் மட்டுமே. மனிதப்பிறவியின் அசைக்கவே முடியாத, விடவே இயலாத, ஆழமான ஓர் உணர்வு ஆசை. அந்த ஆசையின் அஸ்திவாரமே மண்தான்.

07 March 2018

பெண்கள் தின பதிவு ...!

​       ஆண்களுக்கு மட்டுமே தெரியும்... பெண்கள் மீதான பிரியம் எல்லாம் காதல் மட்டுமே இல்லையென்று...!
    இந்த கட்டுரைக்கு பின்னால் உங்களுக்கு தெரிஞ்ச பல பெண்கள் இருக்கலாம் என்பதுதான் உண்மை. இந்த கட்டுரையை அன்புள்ள அம்மா, சகோதரி, தோழி, காதலி என எப்படி வேண்டுமானாலும் ஆரம்பித்து கொள்ளுங்கள். கட்டாயம் இந்த அழகான ராட்சசி உங்க வாழ்க்கை​​ல கண்டிப்பா இருப்பா...!

11 May 2017

காதலன் பல்வாள்தேவன் ...!

     இந்த நூற்றாண்டின் தவிர்க்க முடியாத இந்திய சினிமாவாக பாகுபலி இடம் பிடித்தாகி விட்டது. யாரும் மறுக்க முடியாது. படத்தில் குறைகள் இல்லாமல் இல்லை. பாகுபலியும் பல்வாள்தேவனும் இயற்பியல் விதிகளை மீறும் வல்லமை படைத்தவர்கள் என்று முதல் பாகத்திலேயே தெரிந்து விட்டதால் அதை பற்றி பேசுவதும் வீண்.  நான் பேச விரும்புவது படத்தில் சரியாக சொல்லப்படாத விசயங்களை. 

21 March 2017

சிறகுகளின் ஆறுதல்...!

​​திருமண அழைப்பிதழ் வந்தது. முகவரியில் காயத்ரியின் கையெழுத்து. என் பெயர் கூட அவள் எழுதும்போது புதுக்கவிதை.

என்ன நடந்திருக்கும்…? ஏன் இந்த திருமணம்…? அவளுக்கு என்னவாயிற்று…? எப்படி மறக்க முடிந்தது…?
‘ அரவிந், ஊருக்குப் போறேன். எங்க பாட்டி ரொம்ப ஆசாரம். அவதான் எங்க குடும்பத்துக்கு மகாராணி.

அப்பா இன்னும் தன் தாய்க்குச் சேவகன்தான். அம்மா அடிமை. நம்ம காதலை எப்படியும் சொல்லிடுவேன். பாட்டி சம்மதிக்கணும். இல்லேன்னா…’


17 March 2017

மாலு... மாலு... மாலு...!

          சென்னை போன்ற மாநகரங்களில் வசிக்கும் அத்தனை பேரழகிகளையும் ஒரே இடத்தில் ஒன்று திரட்டுவதற்கென்றே உருவாக்கப்பட்ட இடம், ஷாப்பிங் மால்கள். மால்களில், ஒரு வினாடிக்குச் சராசரியாக எட்டு தேவதைகள் க்ராஸ் செய்வதால், 25-30 ஆண்டு ஆதர்ச தம்பதிகள்கூட, மால்களுக்குச் செல்லும்போது, உறவு சீர்குலைந்து ரிட்டர்ன் ஆவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஏனெனில் மால்களில் திரும்பிய திசையெங்கும் தேவதைகள்… தேவதைகள். ரத்தத்தில் சீஸும், சாஸும் கலந்த தேவதைகள். சென்னை ஏர்போர்ட் கண்ணாடி உடையும் சத்தம் போல ‘ஸ்லிங்’ ‘ஸ்லிங்’ என்று சிரிக்கும் தேவதைகள். இதனால் அங்கு செல்லும் ஆண்கள், மனிதனாகச் சென்று கவிஞனாக வெளிவருகிறார்கள்.

15 October 2016

காதலும் ரகசியங்களும்...!

சில நாட்களுக்கு முன்பு எனக்கு ஒரு குறுந்தகவல் வந்தது.
Today is “heart2heart talk” day. U can ask me any question that u wanted to ask for a long time and i will reply. REPLY MUST. Forward this to your friends and get interesting questions.

மிக சுவாரசியமாக இருக்கவே நானும் என் நண்பர் நண்பிகளுக்கு அனுப்பினேன். சொல்லி வைத்தது போல எல்லோரும் ஒரே விஷயத்தை பற்றியே கேட்டார்கள்.
காதல்!!